கொவிட் -19 கட்டுப்பாடுகள் எதிர்ப்பு போராட்டம் நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு வெளியே அதன் இரண்டாவது வாரத்தின் முடிவை நெருங்கும் நிலையில் "போராட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும்?" என வெலிங்டனின் மேயர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று நடந்த போராட்டத்திற்கு அருகில் பேசிய வெலிங்டன் மேயர் ஆண்டி ஃபோஸ்டர், தற்போதைய காவல்துறை உத்திக்கு ஒப்புதல் அளிக்கிறாரா என்று கூற மறுத்துவிட்டார், ஆனால் "காத்திருப்பு" அணுகுமுறை பலனளிக்காது என்று வலியுறுத்தினார்.

"எவ்வளவு காலம் போராட்டம் நீடிக்கும்? எனக்கு அது பிடிக்கவே இல்லை" என தெரிவித்தார்.

இறுதியில், நிலைமையைத் தீர்க்கும் அதிகாரமும் பொறுப்பும் அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் இருப்பதாக ஃபாஸ்டர் கூறினார்.

"எங்கள் தெருக்களை நாங்கள் திரும்பப் பெற வேண்டும், எங்கள் பொது இடங்கள் திரும்ப வேண்டும்.

மேலும் வெலிங்டனியர்கள் மிரட்டல் அல்லது துன்புறுத்தல்களுக்கு அஞ்சாமல் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நான் அவர்களுடன் தொடர்பு கொண்டேன்" என அவர் தெரிவித்தார்.

வாரயிறுதியில் போராட்டம் விரிவடைந்து விடக் கூடாது என்று பொலிஸாரிடம் குறிப்பாகக் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டம் இப்போது 13வது நாளாக தொடர்கிறது.

இரவில் அதிக மழை பெய்தாலும் முகாம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் "இது மிகவும் விரும்பத்தகாத, கடினமான சூழ்நிலையாகும், மேலும் மக்கள் இந்த போரட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நான் கவலைப்படுகிறேன்."

நிலைமையைத் தணிக்க, போராட்ட அமைப்பாளர்களுடன் காவல்துறை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று கோஸ்டர் மீண்டும் வலியுறுத்தினார்.