இன்று நியூசிலாந்தில் 1929 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்து DHB இல் 1384 பேரும், வைகாடோவில் 155 பேரும், Bay of Plenty இல் 58 பேரும், Tairawhiti இல் 08 பேரும், Rotorua வில் 15 பேரும், Hawke's Bay இல் 17 பேரும், Mid Central இல் 03 பேரும், நோர்த்லேண்டில் 13 பேரும், தரணகியில் 09 பேரும், Capital and Coast இல் 28 பேரும், Wairarapa வில் 05 பேரும், Nelson Marlborough வில் 60 பேரும், Canterbury இல் 35 பேரும், South Canterbury 07 பேரும், தெற்கில் 77 பேரும், Lakes இல் 09 பேரும், Hutt Valley வில் 50 பேரும், Whanganui இல் 11 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் உட்பட 73 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 18 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 26,554 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 2274 முதல் டோஸ்கள், 1396 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 35,903 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 1791 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.