இந்தியாவின் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீதேவி ரவி என்ற 33 வயதான யுவதி ஒருவர் இன்று காலை (17) இன்வர்கார்கிலில் (Invercargill) புற்றுநோயால் இறந்தார்.

கோயம்புத்தூர், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை அறிவியல் மற்றும் முதுகலை அறிவியல் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கம் பெற்ற இவர், ஆக்லாந்தில் உள்ள AUT இல் அப்ளைடு சயின்ஸில் PHD படிப்பதற்காக 2015 இல் நியூசிலாந்துக்கு வந்தார்.

அவர் 2019 இல் முனைவர் பட்டம் பெற்றார் மற்றும் தெற்கு தொழில்நுட்ப நிறுவனத்தில் சாதாரண விரிவுரையாளராக ஆறு மாதங்களுக்கு முன்பு இன்வர்கார்கில் சென்றார்.

இந்நிலையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த டாக்டர் ஸ்ரீதேவியின் மரணத்தை அடுத்து வெலிங்டனை தளமாகக் கொண்ட Aotearoa New Zealand Federation of Tamil Sangams (ANTS) தலைவர் மற்றும் இந்தியன் நியூஸ்லிங்க் ஆகியோர் வெலிங்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய சமூகங்களுடன் இணைந்து அவரது குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இதனிடையே நியூசிலாந்து அரசாங்கத்தின் பயணக் கட்டுப்பாடுகளால் அவரது பெற்றோரிடம் பயணம் செய்வதற்கான பொருளாதார வசதி இல்லாததால் அவரது உடலை நியூசிலாந்தில் தகனம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில் டாக்டர் ஸ்ரீதேவியின் இறுதி சடங்குகள் நிறைவடைந்து இன்வர்கார்கில் உள்ள சவுத்லேண்ட் தகனத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

டாக்டர் ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு ஆதரவாக நிதி திரட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்கள் வெளிவரும் பட்சத்தில் அவற்றை விரைவில் வழங்குவோம்.

செய்திகளுக்கு நன்றி : Indian Newslink