இன்று நியூசிலாந்தில் 306 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 216 பேரும், வைகாடோவில் 48 பேரும், Bay of Plenty இல் 07 பேரும், Tairawhiti இல் 04 பேரும், தரணகியில் 05 பேரும், Hutt Valley இல் 03 பேரும், Mid Central இல் 02 பேரும், நோர்த்லேண்டில் 12 பேரும், Capital and Coast இல் 03 பேரும், Lakes இல் 06 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 18,460 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம்
782 முதல் டோஸ்கள், 1568 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 56,257 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 1941 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.