இன்று நியூசிலாந்தில் 202 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 119 பேரும், வைகாடோவில் 39 பேரும், Bay of Plenty இல் 08 பேரும், Taranaki இல் ஒருவரும், Hutt Valley வில் ஒருவரும், Hawke's Bay இல் 08 பேரும், Nelson Marlborough இல் ஒருவரும், Lakes இல் 04 பேரும், நோர்த்லேண்டில் 17 பேரும், Capital and Coast இல் 04 பேரும், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் உட்பட 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தலில் 63 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 18,655 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 1502 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் குழந்தைகளுக்காக இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 200,562 ஆக அதிகரித்துள்ளது.