இன்று நியூசிலாந்தில் 209 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 99 பேரும், வைகாடோவில் 51 பேரும், Bay of Plenty இல் 15 பேரும், Tairawhiti இல் 04 பேரும், Rotorua வில் 15 பேரும், Hawke's Bay இல் 03 பேரும், Mid Central இல் ஒருவரும், நோர்த்லேண்டில் 21 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் உட்பட 09 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 14 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 16,901 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம்
870 முதல் டோஸ்கள், 1817 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 45,931 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 4501 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.