இன்று நியூசிலாந்தில் 147 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 90 பேரும், வைகாடோவில் 15 பேரும், Bay of Plenty இல் 08 பேரும், Taupo இல் ஒருவரும், Rotorua வில் 08 பேரும், Hawke's Bay இல் 07 பேரும், நோர்த்லேண்டில் 14 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 44 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 16,630 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 1113 முதல் டோஸ்கள், 2030 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 36,230 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 5725 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.