மக்கள் தங்கள் கொவிட் -19 பூஸ்டர் தடுப்பூசியை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அவர்களின் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று மூன்று மாதங்களின் பின்னர் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் தெரிவித்தார்.

இந்நிலையில் கொவிட்-19 பதிலளிப்பு அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ்,பூஸ்டருக்கு தகுதியுடைய ஒவ்வொரு நியூசிலாந்தரையும் கூடிய விரைவில் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்கள் ஓமிக்ரானுக்கு எதிரான பந்தயத்தில் இருக்கிறோம், மேலும் அதிகமான மக்கள் பூஸ்டரை பெறும் பட்சத்தில், தொற்று பரவலின் தாக்கத்தை குறைக்க முடியும்" என்று ஹிப்கின்ஸ் கூறினார்.

ஒமிக்ரான் பரவல் மோசமடைவதற்கு முன்னதாக நியூசிலாந்தில் உள்ளவர்கள் பூஸ்டரை பெற்றுக்கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தினார்.

கொவிட் -19 பூஸ்டர் இடைவெளி மூன்று மாதங்களாகக் குறைக்கப்பட்டதை அடுத்து மேலும் ஒரு மில்லியன் நியூசிலாந்தர்கள் இப்போது தங்கள் பூஸ்டரை பெற தகுதி பெற்றுள்ளனர்.