இன்று நியூசிலாந்தில் 142 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 103 பேரும், வைகாடோவில் 12 பேரும், Bay of Plenty இல் 05 பேரும், Taranaki இல் 03 பேரும், Rotorua வில் 02 பேரும், Hawke's Bay இல் ஒருவரும், Nelson Marlborough வில் இருவரும், Canterbury இல் 03 பேரும், நோர்த்லேண்டில் 11 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே 06 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 54 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 16,442 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 1218 முதல் டோஸ்கள், 2248 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 38,332 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 8636 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.