இன்று பிற்பகல் ஆக்லாந்தின் தெற்கில் உள்ள Runciman இல் இரண்டு வாகனங்கள் மோதியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

Burtt சாலையில் குறித்த விபத்து பிற்பகல் 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதுடன் ஆறு பேர் மிதமான காயங்களுக்குள்ளாகினர்.

விபத்தில் சிக்கிய எட்டு பேரும் மிடில்மோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.