இன்று நியூசிலாந்தில் 126  கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகள் ஆக்லாந்து, வைகாடோ, Hawke's Bay, வெலிங்டன், Tairawhiti, Taranaki, கேன்டர்பரி, Nelson Marlborough, நோர்த்லேண்ட், Bay of Plenty, Lakes ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே 08 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 79 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 96 சதவீதம் பேர் முதல் தடுப்பூசியையும், 94 சதவீதம் பேர் இரண்டாவது தடுப்பூசியையும், 68 சதவீதம் பேர் பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

நாட்டில் நேற்றையதினம் 22,508 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டதாகவும், இதுவரை வழங்கப்பட்ட பூஸ்டர் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 1,324,160 என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.