இன்று நியூசிலாந்தில் 97 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 11 ஒமிக்ரோன் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 61 பேரும், வைகாடோவில் 14 பேரும், Bay of Plenty இல் 08 பேரும், Tairawhiti இல் 03 பேரும், Hawke's Bay இல் 03 பேரும், Rotorua இல் ஒருவரும், நோர்த்லேண்டில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே 07 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 58 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 15,770 ஆகும்.

நாட்டில் நேற்றையதினம் 1251 முதல் டோஸ்கள், 2212 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 46,271 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 12,860 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

நாட்டில் இதுவரை மொத்தம் 1,257,758 பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.