வெஸ்ட்போர்ட்டில் (Westport) கொரியர் வாகனம் திருடப்பட்டதை அடுத்து, West Coast இல் உள்ள மக்கள் பார்சல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 60 கொரியர் பொதிகள் டெலிவரிக்கு தயாராக இருந்த நிலையில் வேன் திருடப்பட்டது.

குறித்த வாகனம் புதன்கிழமை கைப்பற்றப்பட்டதுடன் 38 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார், ஆனால் பொதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும் அவை வெஸ்ட்போர்ட் அல்லது கிரேமவுத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர்.

திருட்டு, வாகன திருட்டு மற்றும் தீ வைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, நேற்றைய தினம் கிரேமவுத் மாவட்ட நீதிமன்றத்தில் அந்த நபர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் வெஸ்ட்போர்ட் டவுன்ஷிப்பில் பாதிக்கப்பட்ட மக்களின் பொதிகள் திருடப்பட்டதைக் கண்டறிய கொரியர் நிறுவனத்திடம் விசாரணைகள் நடந்து வருகின்றன.

திருடப்பட்ட கொரியர் பேக்கேஜ்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது
ஜனவரி 24 மற்றும் 26 க்கு இடையில் Silver Honda Elysion வாகனத்தைப் பார்த்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொண்டு 220124/6520 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.