இன்று நியூசிலாந்தில் 105 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுகளின்  எண்ணிக்கையும் 105 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 76 பேரும், வைகாடோவில் 05 பேரும், Bay of Plenty இல் 09 பேரும், Lakes இல் 07 பேரும், Hawke's Bay இல் ஒருவரும், MidCentral இல் ஒருவரும், Nelson Marlborough வில் இருவரும், Canterbury இல் 03 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் உட்பட 04 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 45 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 15,615 ஆகும்.

நாட்டில் நேற்றையதினம் 1315 முதல் டோஸ்கள், 2314 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 46,827 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

நாட்டில் நேற்றையதினம் 13,112 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதனிடையே 5 முதல் 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 29 சதவீதம் பேர் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளனர்.