வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில், இன்று முதல் நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில், பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், கொரோனா காலத்தில் விபத்துக்கள் குறைவாக இருந்தபோதிலும், தனிமைப்படுத்தல், பயணக் கட்டுப்பாடுகள் என்பன தளர்த்தப்பட்டதன் பின்னர் விபத்துக்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்துக்கு முன்னர் வீதி விபத்துக்களால் மாத்திரம் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழந்திருந்தனர். எனினும், பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் நேற்று முன்தினம் மாத்திரம் விபத்துக்களால் 10 பேர் உயிரிழந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.