கந்தளாய் - சூரியபுர எனும் பகுதியில் முறிந்து விழுந்த விமானத்தில் பயிற்சி விமானி உயிரிழந்ததாக இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

கேகாலையை சேர்ந்த அமரகோன் என்கிற பயிற்சி பெற்றுவரும் விமானியே இவ்வாறு விபத்தில் உயிரிழந்ததாக விமானப்படைத் தளபதி எயார் மார்சல் சுதர்சன பத்திரண தெரிவித்தார்.

 

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை விமானப்படையில் இணைந்திருந்ததுடன் அதே வருடத்திலேயே பயிற்சி விமானியாக தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.