நியூசிலாந்து முழுவதும் சீரற்ற வானிலை தொடர்ந்து நிலவி வருகின்றது. ஆக்லாந்து, Northland மற்றும் Great Barrier Island ஆகி பகுதிகளுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் அதிகபட்சமாக 40 மிமீ மழை பெய்யக்கூடும் என்று MetService கூறுகிறது.

Coromandel Peninsula, Taupō, மற்றும் Bay of Plenty ஆகிய பகுதிகளும் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

Motueka வின் வடமேற்கே உள்ள Bay of Plenty, Rotorua மற்றும் Tasman ஆகிய இடங்களில் ஆறுகளில் நீர் மட்டம் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக MetService கூறுகிறது.

செய்தி நிருபர் - புகழ்