ஸ்ட்ராட்போர்டில் நேற்றிரவு இரு வாகனங்கள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் கிழக்கு சாலையில் (State Highway 43) கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் உறுதி செய்தனர்.

வேறு யாரும் காயமடையவில்லை. இரவு 11:45 மணி வரை சாலை மூடப்பட்டு தீவிர விபத்து பிரிவு சம்பவ இடத்தை ஆய்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.