Breaking News

வைகடோ ஆற்றில் சடலம் ஒன்று மீட்பு - காணாமல் போன பெண்ணின் சடலம் என சந்தேகம்

வைகடோ ஆற்றில் சடலம் ஒன்று மீட்பு - காணாமல் போன பெண்ணின் சடலம் என சந்தேகம்

நேற்றைய தினம் காணாமல் போன வைகடோவை சேர்ந்த ஒரு பெண்ணை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன லீமிங்டன் பகுதியை சேர்ந்த பெண்ணான ஜூலி கெஸ்ட் என்பவரே இவ்வாறு காணமல் போயுள்ளார்

இதனிடையே இன்று வைகடோ ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீசார் இன்று மதியம் ஒரு சடலத்தைக் கண்டுபிடித்தனர்.

ஒரு முறையான அடையாளம் காணப்படவில்லை என்றாலும், அது ஜூலி கெஸ்ட் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று சார்ஜென்ட் சீன் கீலி கூறினார்.

79 வயதான குறித்த பெண்ணின் குடும்பத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த மரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.