இன்று சமோவான் இஃபோகா விழாவில் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கலந்து கொண்டார்.

இன்று ஆக்லாந்து டவுன் ஹாலில் நடந்த குறித்த விழாவில் பசிபிக் மக்கள் அமைச்சர் ஆபிடோ வில்லியம் சியோ, சமூக மேம்பாட்டு அமைச்சர் கார்மல் செபுலோனி மற்றும் எம்பி அனஹிலா கனோங்காடா-சுசுகி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆர்டென் மீது பாய் ஒன்று மூடப்பட்டு 1970 இல் நடந்த Dawns Raids இற்கு அரசாங்கம் மன்னிப்பு கேட்டது.

பாசிஃபிகா சமூக உறுப்பினர்களால் ஆர்டென் மீது மூடப்பட்ட பாய் கழற்றப்பட்ட பிறகு ஆர்டெர்ன் பேச்சுக்காக மேடைக்குச் சென்றார்.

இந்நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்ன் தொழிலாளர் மற்றும் தேசிய அரசாங்கங்களின் கீழ் 1970 இல் நடந்த சோதனைகளுக்கு மன்னிப்பு கேட்டார்.

"Dawns Raids மற்றும் சீரற்ற போலீஸ் சோதனைகள் நடந்ததற்கான வருத்தத்தை அரசாங்கம் தெரிவிக்கிறது.Dawns ரெய்டுகள் பல பசிபிக் தீவுவாசிகளை நாடு கடத்துவதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் காரணமாக அமைந்தது இதற்கான ஆழ்ந்த மற்றும் நேர்மையான மன்னிப்பை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம்." என பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார்.