ஆஸ்திரேலியாவை சேர்ந்த திரைப்பட இயக்குனர் ஈழன் இளங்கோ வரிகளில், பின்னணி பாடகர் சத்யன் இளங்கோ, மயூறியா மரியதாஸ் மற்றும் சிவாணி இளங்கோ ஆகியோரின் குரலில், கொரோனா தொற்று அவலத்தில் முன்வரிசையில் பணி புரிந்த மருத்துவர்களுக்கும் மற்றைய பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக உருவாக்கப்பட்ட பாடல் " பார் போற்ற நாங்கள் சொல்வோம் நன்றி" என்ற பாடல்.

இப்பாடலில் பல நாடுகளைச் சேர்ந்த கலங்கர்கள் அவர்களின் பங்களிப்பைச் செய்து இருக்கிறார்கள்.

இப்பாடல் வியாழக்கிழமை, 15 ஆம் தேதி, ஜூலை மாதம் 2021 அன்று அனைத்து இணைய தளங்களிலும், IBC TV UK, சக்தி TV இலங்கை, சேனல் 7 தமிழ், இந்தியா, அரசன் டிஜிட்டல் மீடியா நியூ சிலாந்து,CTV Tamil இலங்கை, மற்றும் மகாராஷ்டிராவில் நடைபெறும் ஒரு மருத்துவர் நிகழ்விலும் வெளியாகிறது.