இலங்கையில் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுள் 761 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுள் 101 பேர் திவுலுப்பிட்டிய மற்றும் 100 பேர் கடவத்தையை சேர்ந்தவர்களாகவுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 493 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .அதில் 263 பேர் பாணந்துறை வடக்கை சேர்ந்தவர்களாகவுள்ளனர்.

இதேவேளை 275 பேர் காலி மற்றும் 265 பேர் குருநாகல் மாவட்டத்திலும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 218 பேர் கொழும்பு மாவட்டத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 45 பேர் மவுண்ட்லவேனியா, 43 பேர் கொழும்பு கோட்டை மற்றும் 36 பேர் ஸ்லேவ் ஐலண்டை சேர்ந்தவர்களாகவுள்ளனர்.

மேலும் கேகாலை -233 பேர், யாழ்ப்பாணம் -208 பேர், அநுராதபுரம் – 139 பேர், கண்டி -124 பேர், அம்பாந்தோட்டை -113 பேர்,மாத்தறை -106 பேர், புத்தளம் – 94 பேர், இரத்தினபுரி – 88 பேர், நுவரெலியா – 80 பேர், முல்லைத்தீவு -77 பேர் , கிளிநொச்சி -74 பேர், மாத்தளை – 62 பேர்,பதுளை -53 பேர், மட்டக்களப்பு -36 பேர், அம்பாறை -31 பேர், மொனராகலை -29 பேர், பொலன்னறுவை – 14 பேர், வவுனியா -9 பேர், மன்னர் -7 பேர் மற்றும் திருகோணமலையில் 4 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை வெளிநாடுகளிலிருந்து வருகைத் தந்துள்ள 32 பேரும் இதில் அடங்குவதாக கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.