Pureora வனப்பகுதியில் ஒரு வாரமாக காணாமல் போயுள்ள ஆக்லாந்தை சேர்ந்த 79 வயது மூதாட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

LandSAR மற்றும் பொலிஸார் இன்று தேடுதல் பணியில் ஈடுபட்டதாக துப்பறியும் ஆய்வாளர் கிரஹாம் பிட்கெத்லி தெரிவித்தார்.

குறித்த பெண், மார்ச் 23, சனிக்கிழமை காணாமல் போவதற்கு முன்பு, Pureora காட்டில் தூண்டில் அமைக்கும் குழுவுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் நடுத்தர உயரம், மெலிதான உடல் மற்றும் நரை முடி கொண்டவர் என விவரிக்கப்படுகிறது.

இந்நிலையில் மார்ச் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் அப்பகுதியில் இருந்த வேட்டைக்காரர்கள் மற்றும் எவரும் காவல்துறையை அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர்‌ தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்