ஆக்லாந்தின் North Shor இல் நடந்த தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Browns Bay என்ற இடத்தில் Clyde வீதியில் மாலை 5.48 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவருக்கு நன்கு தெரிந்த குற்றவாளி, தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை ஆதரவளிக்கிறது. சூழ்நிலைகள் பற்றிய விசாரணைகள் நடத்தப்படும் போது அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரும் தேடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்