Christchurch புறநகர் பகுதியான Aranui இல் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

Hampshire தெரு பகுதியில் இரவு 9.45 மணியளவில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸ் பேச்சாளர் இன்று காலை தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்