சூர்யாவின் 'கங்குவா' படம் பல மாதங்களாக ஷுட்டிங்கில் இருக்கிறது. இதனால் இப்படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக எழுந்ததுள்ளது. அதற்கேற்ப பெரும் பொருட் செலவில், பிரம்மாண்டமாக 'கங்குவா' படத்தினை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த மிரட்டலான அப்டேட் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

சூர்யா நடிப்பில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'எதற்கும் துணிந்தவன்' படம் ரிலீஸ் ஆனது. இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் சூர்யாவின் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் மீண்டும் அவரை எப்போது திரையில் காண்போம் என ரசிகர்கள் வெறித்தனமான காத்திருப்பில் இருக்கின்றனர்.

அப்படி அவரை அடுத்ததாக திரையில் காண்பிக்க போகும் படம் தான் 'கங்குவா'. தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து வருபவர் சிறுத்தை சிவா. கடைசியாக இவர் ரஜினி நடிப்பில் அண்ணாத்தா படத்தினை இயக்கி இருந்தார். ஆனால் இப்படம் ரசிகர்களை பெரிதளவில் கவரவில்லை. இதனையடுத்து முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்துள்ள சிறுத்தை சிவா 'கங்குவா' படத்தினை இயக்கியுள்ளார்.

தன்னுடைய ஸ்டைலில் இருந்து முற்றிலுமாக விலகி இப்படத்தினை இயக்கியுள்ளார் சிறுத்தை சிவா. பேண்டஸி ஜானரில் வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக 'கங்குவா' உருவாகியுள்ளது. அத்துடன் சூர்யாவின் கெரியரில் அதிக பொருட் செலவில் தயாராகியுள்ளது இப்படம். கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், அண்மையில் டப்பிங் பணியும் துவங்கியது.

இந்நிலையில் 'கங்குவா' படத்தின் அதகளமான அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மாலை 4.30 மணிக்கு இப்படத்தின் மிரட்டலான டீசர் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. நாளை சூர்யாவின் தரிசனத்தை காண இப்பவே ரசிகர்கள் வெறித்தனமாக தயாராகி வருகின்றனர்.

'கங்குவா' படத்தில் சூர்யாவுடன், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. அத்துடன் 3டியில் உருவாகும் இப்படத்தை 10 மொழிகளில் ரிலீஸ் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே மாதம் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.