கடந்த மாதம் Taranaki இல் உள்ள Stratford என்ற இடத்திற்கு அருகே நீரில் மூழ்கிய காரில் இறந்து கிடந்த பெண் ஒருவர் அமெரிக்காவிலிருந்து வந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

67 வயதான தன்யா ஹெலீன் ப்ரோசர் என்ற குறித்த பெண், பெப்ரவரி 20 அன்று Forgotten நெடுஞ்சாலைக்கு அருகில் வாகனம் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தார்.

மாநில நெடுஞ்சாலை 43 சாலைக்கு அருகில் உள்ள Tangarakau ஆற்றில் காலை 9 மணியளவில் கார் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உயிரிழந்த பெண் அமெரிக்காவிலிருந்து வந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்