ஆக்லாந்தில் உள்ள Herne Bay என்ற இடத்தில் சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Jervois சாலையில் உள்ள வணிக நிலையம் ஒன்றில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றதாக துப்பறியும் சார்ஜென்ட் ஆஷ் மேத்யூஸ்,
அவர் தெரிவித்தார்.

திருடப்பட்ட வாகனம் ஒன்றை பயன்படுத்தி கடைக்குள் நுழைந்ததாக அவர் தெரிவித்தார். அந்த இளைஞர்கள் கடைக்குள் நுழைந்து பல பொருட்களை எடுத்துக்கொண்டு வேறு வாகனத்தில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வாகனம் ஒன்று சிறிது நேரத்திற்கு பின்னர் தெற்கு நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றவாளிகள் தப்பிச்சென்ற வாகனத்தை Manurewa வில் காவல்துறையினர் வாகனத்தை முற்றுகையிட்டனர். மேலும் திருடப்பட்ட பல பொருட்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக மேத்யூஸ் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இன்று இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலும் ஐந்து இளைஞர்கள் இளைஞர் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்