ஆக்லாந்து Western Springs கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து Western Springs கல்லூரி மாணவர்கள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்று பள்ளி அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மதியம் 12.50 மணியளவில் மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இன்று முழுவதும் பள்ளி மூடப்பட்டிருக்கும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

செய்தி நிருபர் - புகழ்