ஆடை திருட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினரும் பசுமை கட்சி உறுப்பினருமான கோல்ரிஸ் கஹ்ராமன் இன்று ஆக்லாந்து  மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

43 வயதான முன்னாள் அரசியல்வாதி கோல்ரிஸ் கஹ்ராமன் ஆக்லாந்து மற்றும் வெலிங்டனில் உள்ள ஆடை கடைகளில் திருடியதாக நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

இந்நிலையில் ஆக்லாந்து நீதிமன்றில் ஆஜராகிய கஹ்ராமனின் வழக்கறிஞர் அன்னாபெல் கிரெஸ்வெல், அவர் சார்பாக வாதாடினார். கஹ்ராமன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், மேலும் அவருக்கு ஜூன் மாதம் தண்டனை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்