வடக்கு ஆக்லாந்தில் கடலில் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்த ஓய்வு பெற்ற பால் மிடில்டன் இன்று பிற்பகல் கேம்பர் வேனில் மீன்பிடிக்க சென்றபோது Gulf Harbour படகு முனையத்தில் குறித்த எச்சங்களை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் மிடில்டன் கூறுகையில்...

தண்ணீரில் ஏதோ மிதப்பதை பார்த்தேன், அது ஒரு மாடு அல்லது வேறு ஏதாவது இருக்கலாம் என்று நான் நினைத்தேன். நான் அருகில் சென்று பார்த்தபோது அது ஒரு பெரிய கருப்பு பிளாஸ்டிக் பை என்பதை உணர்ந்தேன் என்று மிடில்டன் கூறினார்.

மிடில்டனின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் பையின் உள்ளே மற்றொரு பிளாஸ்டிக் பை இருந்தது. அதனுள் ஒரு கை இருந்ததாக அவர் கூறினார். குறைந்தபட்சம் மூன்று பிளாஸ்டிக் பைகளில் உடல் சுற்றப்பட்டிருந்ததாக அவர் நினைத்தார்.

அது கனமாக இருந்தது, என்னால் அதை மேலே இழுக்க முடியவில்லை, பின்னர் பொலிஸாரை அழைத்ததாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் முதலில் Stuff இணையதளத்தில் வெளியானது.