Queenstown இல் ஜன்னல் வழியாக தவறி விழுந்த குழந்தை பலத்த காயம் அடைந்துள்ளது.

நேற்றைய தினம் இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து ஹெலிகாப்டர் உட்பட அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

இந்நிலையில் காயமடைந்த குழந்தை Lakes மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்