நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மற்றும் அவரது வருங்கால கணவர் கிளார்க் கேஃபோர்ட் இருவரும் இருவரும் 2019 முதல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இதையடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு 'நெவ்' என்ற 4 வயது மகள் இருக்கின்றார்.

இந்நிலையில் 2022 ஆம் ஜனவரியில் ஜசிந்தா ஆர்டெர்ன் மற்றும் கிளார்க் கேஃபோர்ட் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் கொவிட்-19 ஓமிக்ரான் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 43, மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான பியூ கிளார்க் கேஃபோர்ட், 47, இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திருமண விழா Hawke's Bay இல் உள்ள ஒரு திராட்சைத் தோட்டத்தில் நடைபெறும் என்று NZ Herald இற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி நடுப்பகுதியில் திருமணம் நடைபெறும் எனவும் இதில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது.

அழைப்பிதழ் பட்டியலில் நியூசிலாந்தில் தற்போது எதிர்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உட்பட கட்சி உறுப்பினர்கள் பலர் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

- இந்த தகவல் முதலில் NZ Herald மூலம் வெளியிடப்பட்டது.