Invercargill இன் மேயர், இந்த வாரம் Dunedin மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் குணமடைந்து வருகிறார்.

மேயர் நோபி கிளார்க்கிற்கு கடந்த புதன்கிழமை லேசான மாரடைப்பு ஏற்பட்டு, முன்னெச்சரிக்கையாக அவர் சவுத்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் அடுத்த நாள் கூடுதல் பரிசோதனைக்காக Dunedin மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என‌ மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே நேற்றைய தினம் அவருக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் துணை மேயர் டாம் காம்ப்பெல் கூறுகையில், மேயர் குறைந்தபட்சம் 24 மணிநேரம் தீவிர சிகிச்சையில் இருப்பார்.

அறுவைசிகிச்சை நன்றாக நடந்ததைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், நானும் அனைத்து கவுன்சிலர்களும் நோபி விரைவில் குணமடைய விரும்புகிறோம் என்று கேம்ப்பெல் கூறினார்.

நோபி கிளார்க் குணமடைவதற்கு இரண்டு மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. அது வரை காம்ப்பெல் கவுன்சிலில் பொறுப்பில் இருப்பார்.

செய்தி நிருபர் - புகழ்