ஆக்லாந்தில் கடந்த திங்கட்கிழமை கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முதியவரின் பெயரை காவல்துறை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர் 66 வயதான Fuk-Fu Joseph Kwok என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் Ellerslie இல் உள்ள Celtic Crescent பகுதியில் அமைந்துள்ள வீட்டில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் அவர் வார இறுதியில் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு பொலிஸார் ஆதரவு அளிப்பதாக டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஸ்காட் பியர்ட் தெரிவித்தார்.

எங்கள் விசாரணையில் எங்களுக்கு உதவக்கூடிய தகவலை‌ கொண்டவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறது என பியர்ட் கூறினார்.

இதனிடையே Kwok உயிரிழந்ததை அடுத்து காணாமல் போனதாக கூறப்படும் அவரது 67 வயது மனைவியையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்