தெற்கு வைகாடோ, Taupō மற்றும் Otorohanga பகுதிகளில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என மெட்சர்வீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், Waikato, Waitomo, Taumarunui, Bay of Plenty, Rotorua, Taupō மற்றும் Taihape ஆகிய இடங்களில் கடுமையான இடியுடன் கூடிய மழை கண்காணிப்பு அமலில் உள்ளது.

இடியுடன் கூடிய மழை தெற்கு நோக்கி நகர்வதாகவும், பலத்த மழை மற்றும் அடிக்கடி மின்னல் தாக்கம் காணப்படும் என‌ எதிர்பார்க்கப்படுவதாகவும் MetService கூறுகிறது.

மாலை 6 மணி வரை கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்