Christchurch இன் Brighton கடற்கரையில் சனிக்கிழமை கரையொதுங்கிய இராட்சத திமிங்கிலம் நேற்று இரவு புதைக்கப்பட்டது.

குறித்த திமிங்கிலம் முப்பது டன்கள் வரை எடையும் பதினைந்து மீட்டர் நீளமும் கொண்டது.

இந்த திமிங்கிலம் சனிக்கிழமையன்று கடற்கரைக்கு வந்தது, அதை மீண்டும் நீந்த வைக்க முயற்சித்த போதிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறந்தது.

கடந்த மாதத்தில் எங்கள் கடற்கரையில் இறந்த ஐந்தாவது திமிங்கிலம் இதுவாகும் என கடல் பாலூட்டி மருத்துவரான கேட்டி ஆலிவர் கூறினார்.

உள்ளூர் ஐவி திமிங்கலத்தை அடக்கம் செய்யும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பு அதை ஆசீர்வதித்தார்.

செய்தி நிருபர் - புகழ்