Coromandel இல் Whangamata என்ற இடத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக காணாமல் போன 29 வயது இளைஞரை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

அக்டோபர் 29, ஞாயிற்றுக்கிழமை Wentworth Valley இல் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த ஜோர்டான் என்ற‌ குறித்த இளைஞன் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.

ஒரு அறிக்கையில், அவர் பழுப்பு நிற அடர்ந்த முடியை கொண்டவர், மெல்லிய உடலமைப்பு மற்றும் 175 செமீ உயரம் கொண்டவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Wentworth Valley சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் தேடல் மற்றும் மீட்புப் பணியாளர்கள் அவரைத் தேடி வருகின்றனர்.

அப்பகுதியில் ஒரு போலீஸ் ட்ரோன் மற்றும் பிற விமானங்களும் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜோர்டான் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்