தேர்தல் ஆணையத்தால் நியூசிலாந்து பொது தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் பொது தேர்தலில் தேசிய கட்சி வெற்றிப்பெற்று அதன் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் நியூசிலாந்தின் 42‌ ஆவது பிரதமராக தேர்வு செய்யப்பட்டதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர உள்ள தொழிற்கட்சி தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று ஊடகங்களிடம் கூறுகையில்....

தொழிற்கட்சி ஒரு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்கும் என தெரிவித்தார்.

எங்கள் அணியில் பல முன்னாள் அமைச்சர்கள் உட்பட அனுபவத்தைப் பெற்றுள்ளோம், மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் நியூசிலாந்து மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற கடினமாக உழைக்க திட்டமிட்டுள்ளோம் என்று ஹிப்கின்ஸ் கூறினார்.

மேலும் தொழிற்கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பேன் என மீண்டும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் நாட்டிற்கும் தொழிலாளர் கட்சிக்கும் பலவற்றை வழங்கிய எம்.பி.க்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்த அவர் உங்கள் சமூகங்களுக்கும் நியூசிலாந்திற்கும் மாற்றத்தை ஏற்படுத்த கடினமாக உழைத்ததற்கு நன்றி என தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்