Hamilton East rifle கிளப்பில் (துப்பாக்கி கிளப்) நடந்த திருட்டு குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் திருடர்கள் 14 துப்பாக்கிகள் மற்றும் பெரிய அளவிலான வெடிமருந்துகளை திருடிச் சென்றுள்ளனர்.

துப்பறியும் மூத்த சார்ஜென்ட் டெர்ரி வில்சன் கூறுகையில், கொள்ளை சம்பவம் அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 க்கு இடையில் நடந்ததாகவும், வியாழக்கிழமை ஒரு கிளப் உறுப்பினரால் இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

காவல்துறையினர் இதை தீவிரமாக விசாரித்து வருகின்றனர் வருகின்றனர், மேலும் இந்த குற்றவாளிகளை அடையாளம் காணவும், அவர்கள் திருடிய பொருட்களைக் கண்டறியவும் பல வழிகளில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் ஹமில்டன் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

செய்தி நிருபர் - புகழ்