நேற்றைய தினம் ஒரு பெரிய வெள்ளை சுறாவால் தாக்கப்பட்ட போது, ​​டைவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக Wairarapa வில் உள்ள Fishing Club தெரிவித்துள்ளது.

மூழ்காளர் காயமின்றி தப்பினார், ஆனால் அவரது ஃபிளிப்பர் (நீருக்கடியில் நீந்துவதற்கு பயன்படுத்தப்படும் அலகு போன்ற அமைப்பு) சுறாவின் தொண்டைக்குள் சென்றதாக Ngawi Sports Fishing Club கூறியது.

சுறா மீன் ஃபிளிப்பர்களில் ஒன்றைக் கிழித்துவிட்டது என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

அந்த பகுதியில் டைவிங் செய்யும் மற்றவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கிளப் எச்சரித்தது.

செய்தி நிருபர் - புகழ்