ஆக்லாந்தில் நேற்று மாலை கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆக்லாந்தின் வடமேற்கே 25 கிமீ தொலைவில் உள்ள வெனுபாயில் உள்ள ரிவர்லியா சாலையில் மாலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீவிர விபத்துப் பிரிவு சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது சாலை மூடப்பட்டது.

விபத்தின் சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

செய்தி நிருபர் - புகழ்