தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது லெஜண்ட் சரவணாவின் அறிமுக படம். சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இயக்குநர் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படத்துக்கு தற்போது பாலிவுட் ஹீரோயினான ஊர்வசி ரவுத்தேலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 200 கோடி ரூபா பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.