காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இன்று நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள்
வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெலிங்டனின் சிவிக் சதுக்கத்தில் ஒன்று கூடிய 
சுமார் 1000 போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்கு அணிவகுத்துச் சென்றனர்.

காபன் உமிழ்வைக் குறைக்க வேண்டும், மீளுருவாக்கம் செய்யும் விவசாயத்திற்கு மாற வேண்டும், வாக்களிக்கும் வயதை 16 ஆகக் குறைக்க வேண்டும் மற்றும் காலநிலை நெருக்கடிக்கு பதிலளிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியின் அமைப்பாளர் சோஃபி ஹேண்ட்ஃபோர்ட் கூறுகையில், காலநிலை மாற்றம் ஒரு அவசரப் பிரச்சினை என்றும், இப்போதே அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இன்று இந்த போரட்டத்தில் அனைத்து வயதினரும் பங்கேற்கின்றனர் என அவர் தெரிவித்தார்.