நேற்றைய தினம் Northland இல் உள்ள Whangārei ஆண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11 ஆம் ஆண்டு மாணவன் காணாமல் போன குகையில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Whangārei இல் உள்ள Abbey குகைகளுக்குள் சென்ற மாணவர்கள் குழுவில் இருந்த ஒரு மாணவரை காணவில்லை என்று காவல்துறை முன்னதாக உறுதிப்படுத்தியது.

பெரும்பாலான குழுவினர் பாதுகாப்பாக வெளியேறியதாகவும், ஆனால் ஒரு மாணவரை காணவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் குறித்த மாணவனை தேடும் பணியில் இன்று காலை 6.30 மணிக்கு சற்று முன்னர் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக வடக்கு மாவட்ட கமாண்டர் கண்காணிப்பாளர் டோனி ஹில் அறிவித்தார்.

ஆக்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பொலிசார் தொடர்ந்து தேடுதல் நடத்தியதை அடுத்து,  சடலம் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குகைக்குள் சிறுவன் எப்படி உயிரிழந்தார் என்பதை அறிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் நாங்கள் வெளிப்படையாகவே விசாரணை மேற்கொள்வோம். உடல் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை. பொலிஸார் குறித்த மாணவரின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

இது அவர்களுக்கு ஒரு சோகம், எங்கள் இரங்கல்கள் அவர்களுக்குச் செல்கின்றன என்று ஹில் கூறினார்.

குகைப் பகுதியைச் சுற்றி சில சுற்றிவளைப்புகள் இருக்கும், அதே சமயம் பொலிஸார் வழக்கமான காட்சிப் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர், என்றார்.  குகைகளை எப்போது திறக்க வேண்டும் என்பதை உள்ளூராட்சி மன்றம் முடிவு செய்யும் என அவர் தெரிவித்தார்.