கூட்டு உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் 20,000-க்கும் மேற்பட்ட இடைநிலை பள்ளி ஆசிரியர்கள் நியூசிலாந்து முழுவதும் மூன்று நாள் வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், உயர்நிலைப் பள்ளிக் கல்வி மற்றும் தொழிலின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு கூட்டு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என்று முதுநிலை ஆசிரியர் சங்கம் (PPTA) தெரிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்த போரட்டம் நாளை (09)  South Island இல் தொடங்கி நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும்.

புதன்கிழமை (10) Wellington, Hutt Valley, Manawatu-Whanganui, Wairarapa, Taranaki, Hawkes Bay ஆகிய இடங்களில் போரட்டம் இடம்பெறும்.

வியாழக்கிழமை (11) Waikato, Bay of Plenty, Western Bay of Plenty, Central Plateau, Hauraki, Coromandel, East Coast, Counties-Manukau, Auckland, Northland ஆகிய இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபட உள்ளனர்.