South Canterbury இல் நடைபயணம் மேற்கொள்ளும் பிரபலமான மலையில் நேற்று காணாமல் போன ஒருவர் பாதுகாப்பாகவும், நலமாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Peel வனப்பகுதிக்கு அருகில் உள்ள Little Mount Peel மலையில் ஷான் என்ற 29 வயது இளைஞன் இரண்டு குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர் மதியம் 1.30 மணியளவில், பாதி வழியில் அவர் காருக்குத் திரும்புவதாகத் தனது தோழர்களிடம் கூறினார்.

பின்னர் அவருடன் இருந்த மற்ற இரண்டு பேரும் திரும்பி வந்த போது, ஷான் காருக்கு திரும்பியதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அவர்கள் அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு நடந்து சென்று மாலை 6.30 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இந்நிலையில் இது தொடர்பில் ஆராக்கி பகுதி கமாண்டர் இன்ஸ்பெக்டர் விக்கி வாக்கர் கூறுகையில், தேடுதல் பணிகள் நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தது.

இன்று காலை 10 மணிக்கு முன்னதாக ஒரு தன்னார்வ தேடல் குழுவால் ஷான் கண்டுபிடிக்கப்பட்டார்.

முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸ் குழுவினரால் மதிப்பீடு செய்வதற்காக அவர் விமானம் மூலம் வெளியேற்றப்பட்டு Peel வன தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்பகுதியில் வெப்பநிலை ஒரே இரவில் 5 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது, எனவே அது அவருக்கு ஒரு சங்கடமான இரவாக இருந்திருக்கும் என்று வாக்கர் கூறினார்.