மேற்கு ஆக்லாந்தில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தின் முன்பகுதியில் கார் மோதியதில்  ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து மதியம் 2 மணியளவில் நடந்தது.

Te Atatu வீதியில் உள்ள Barfoot & Thompson அலுவலகத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பொலிசார் தெரிவித்தனர்.

தீவிர விபத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.