Christchurch இல் இன்று தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

அவற்றில் மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

காலை 7.37 மணிக்கு ஏற்பட்ட குறித்த நிலநடுக்கம் நகரின் வடகிழக்கே 10 கிமீ தொலைவில் 8 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

6600 க்கும் அதிகமானோர் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

அந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 3.6 என்ற சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இரவு, 2.21 மணியளவில் அதே பகுதியில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.