கனமழை காரணமாக வெலிங்டனின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கீழ் North Island மற்றும் South Island பகுதிகளுக்கு MetService கடுமையான வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

Mount Taranaki, Wellington, Nelson, Buller மற்றும் Westland  ஆகியவை மஞ்சள் கனமழை எச்சரிக்கையின் கீழ் உள்ளன.

Tararua Range மற்றும் Kāpiti Coast ஆகியவையும் ஆரஞ்சு கனமழை எச்சரிக்கையின் கீழ் உள்ளன, மேலும் நண்பகல் நேரத்தில் மழைவீழ்ச்சி உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tararua Range ஐ சுற்றி 150 மில்லிமீட்டர் மழையும், Kāpiti Coast ல சுற்றி 100 மிமீ மழையும் பெய்யக்கூடும் என்று மெட் சர்வீஸ் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக நீரோடைகள் மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயரக்கூடும். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் கூட ஏற்பட வாய்ப்புகள் உண்டு மற்றும் வாகனம் ஓட்டுதல் ஆபத்தானதாக இருக்கலாம் என்று அது கூறியது.

வெலிங்டன் சிட்டி கவுன்சில் நகரைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளம் மற்றும் வடிகால்கள் அடைப்பு இருப்பதாக கூறியுள்ளது.

மாலை வரை வெலிங்டன் மற்றும் தெற்கு Wairarapa வில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.